காஞ்சிபுரம் மாநகராட்சியில் மண் சாலையே இல்லாத மாநகராட்சியாக உருவாக்க மேயர் மகாலட்சுமி யுவராஜ் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 51 வார்டு பகுதிகள் கொண்டு ஓர் ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான வார்டு பகுதிகள் மாநகராட்சி விரிவாக்க நகர்ப்புற பகுதியாக விளங்குவதால் அப்பகுதிகளில் பெரும்பாலும் மண் சாலைகளாகவே காணப்படுவதால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அனைத்து சாலைகளும் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என மாமன்றத்தில் மாமன்றம் உறுப்பினர்களால் தீர்மானம் கொண்டுவரப்பட்டன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மண் சாலைகளே இல்லாத அளவிற்கு தார் சாலைகளை அமைக்கும் பணிக்காக கலைஞரின் நகர்ப்புற விரிவாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்கப்பட்டு தார் சாலை அமைக்கப் பணியினை மேற்கொண்டு உடனடியாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரரிடம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி 30 வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கோரிக்கையை ஏற்று மொட்டைகுளம் தெரு பகுதியில் நகர்ப்புற விரிவாக்க பகுதியில் நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக இருந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற கூறியதை தொடர்ந்து முதற்கட்டமாக இப்பகுதியில் இன்று தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றன.
மேலும் மொட்டைகுளம் பகுதியில் தார் சலை அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தார் சாலை பணியினை பார்வையிட்டு அதன் தரம் குறித்து கேட்டறிந்தார்.
இவ் ஆய்வின் போது மாநகராட்சி மன்ற உறுப்பினர் சந்துரு, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் மற்றும் மாநகராட்சி பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments
Thank you for your comments