Breaking News

காட்பாடியில் நாராயணா பள்ளி நுழைவாயில் கேட் விழுந்து இரவு காவலர் பலி! -விபத்தா? அல்லது கொலையா?

காட்பாடியில் நாராயணா பள்ளி நுழைவாயில் கேட் விழுந்து இரவு காவலர் பலி!
உறவினர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் முற்றுகை
விபத்தா? அல்லது கொலையா?
முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம், காட்பாடி திருவலம் சாலையில் உள்ள பழைய காட்பாடி சினிமா தியேட்டர் அருகே நாராயணா இ-டெக்னோ (CBSE) தனியார் பள்ளி இயங்கி வருகிறது. 



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
உடைந்த நுழைவாயில் கேட்

இந்த பள்ளியில் இரவு நேர காவலராக பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 65) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு ராமமூர்த்தி வழக்கம் போல பணிக்கு வந்தார். அவர் பணிக்கு வந்த சிறிது நேரத்தில் பள்ளி நுழைவாயிலில் இருந்த பெரிய இரும்பு கேட் அவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தி இறந்தார். 


இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினர் மற்றும் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் கேட் விழுந்ததால் காவலாளி பலியாகி உள்ளார். 

பகல்நேரத்தில் பள்ளி வேலையில் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 

இதற்கிடையே ராமமூர்த்தியின் உறவினர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.  இரும்பு கேட் தானாக விழ வாய்ப்பு குறைவு. அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இந்த சம்பவம் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

File Photo

இந்த பள்ளி நுழைவாயில் கேட் விழுந்து பலியான சம்பவத்தில் இதுவரையில் வேலூர் மாவட்ட கல்வித்துறை ஒரு சாதாரண விசாரணை கூட செய்யவில்லை.

இதனை மூடி மறைக்கவே பள்ளி நிர்வாகம் முழுவதுமாக முயற்சி செய்தது பள்ளி நிர்வாகமும் இந்த செய்தியை வெளியிட கூடாது என செய்தியாளர்களை மிரட்டும் விதமாக பேசியது ஜனநாயக படுகொலை..

கேட்டிற்கு எந்த வித சேதமுமில்லை இது விபத்தா? அல்லது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்ட கொலையா? என்பது தீவிர விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

கோப்பு படம்


இரவு நடந்த இச்சம்பவம் குறித்து  காலையில்தான் விஏஓக்கு  தகவல் அளிக்கப்பட்டுள்ளதாம்... இதன்  பின்னணியில்  என்ன? என்பது குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும். 

இச்செயல், விபத்தா? கொலையா? என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. 

முறையான விசாரணை நடைபெறுமா? அல்லது பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக காவல்துறை செயல்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..


No comments

Thank you for your comments