Breaking News

விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் (22.06.2023) இன்று மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் மாண்புமிகு சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத் துறை சார்பில் விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில்  டிராக்டர் வாங்க ₹9,55,900 /- ம்  வேளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 6 மகளிர் சுய உதவிகுழுவிற்கு  88 பயனாளிகளுக்கு ₹ 73,55,900/_ ஆக மொத்தம் ₹ 83,11, 800/_ரூபாயில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை


இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் திரு.ஜி .செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்  மாநகராட்சி மேயர்  திருமதி.மகாலட்சுமி யுவராஜ்  மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்.திரு.படப்பை ஆ.மனோகரன்  மாவட்ட ஊ.குழு துணகத்தலைவர் திருமதி.நித்யா சுகுமார் மாவட்ட வருவாய்அலுவலர் திரு.வெங்கடேஷ் காஞ்சிபுரம்  மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி் பா.ஜெயஸ்ரீ கூட்டுறவுத் துறை அலுவலர்கள் ஊராட்சி பேரூராட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர் 

No comments

Thank you for your comments