மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் - திமுக சார்பில் 12 பேர் மனு தாக்கல்
தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டத்திலும் திட்ட குழு அமைக்கப்படாமலே பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தேர்தல் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு, தேர்தல் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட திட்டக் குழுவிற்கு மாவட்ட ஊராட்சியிலிருந்து இருந்து எட்டு உறுப்பினர்களும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிலிருந்து நான்கு உறுப்பினர்கள் என மொத்தம் 12 உறுப்பினர்கள் இக்குழுவுக்கு தேர்வு செய்யப்படுவார்.
திட்ட குழுவின் தலைவராக மாவட்ட ஊராட்சி தலைவரும் , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செயலராகவும் இருப்பர்.
இந்நிலையில் இன்று இதற்கான வேட்பு மனுவை திமுக சார்பில் நித்தியா சுகுமார் , பொற்கொடி செல்வராஜ் , மாமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் தேர்தல் அலுவலரும் , மாவட்ட வருவாய் அலுவலருமான வெங்கடேஷிடம் , தெற்கு மாவட்ட திமுக செயலாளர் , எம்எல்ஏ வான சுந்தர் மற்றும் எம்.பி செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர் தலைமையில் சென்று வேட்பு மனுக்களை அளித்தனர்.
வேட்பு மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான வெங்கடேஷ், அதற்கான சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்ட பின் அதற்கான அத்தாட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்த உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
12ஆம் தேதி மனுக்கள் பரிசீலிகப்பட்டு, 14ஆம் தேதி மூணு மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என்றும், தேர்தல் தேவைப்பட்டால் வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான வெங்கடேஷ் தெரிவித்தார்.
இந்த வேட்பு மனு நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சுகுமார் , உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் , உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் , காஞ்சிபுரம் மாநகர துணை மேயர் குமரகுருநாதன் , காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்
.jpg)



No comments
Thank you for your comments