Breaking News

பெண் மயிலை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரத்தில் சுற்றித்திரிந்த தேசிய பறவையான பெண் மயிலை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மடம் தெரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் வளாகத்தில் மயில் ஒன்று சுற்றித் திரிவதாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதன் அடிப்படையில் நிலைய சிறப்பு அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயிலை லாவகமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தின் தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்து அங்கு சென்று வனக்காப்பாளர் பரணிதரன் இடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட தேசிய பறவை மயில் பெண் இனத்தைச் சார்ந்தது என்றும் இரைக்காக நகருக்குள் வந்திருக்கலாம் எனவும் இதனை மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க உள்ளனர்.

No comments

Thank you for your comments