Breaking News

ஆசையாய் வாங்கிய ஊத்தப்ப தோசையை சாப்பிட முயன்ற வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தனியார் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கிய ஆனியன் ஊத்தப்பத்தில் இரும்பு கம்பி துண்டு. 

ஆசையாய் வாங்கிய ஊத்தப்ப தோசையை பிட்டு சாப்பிட முயன்ற வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி.


காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் டிகே நம்பி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் சரவண பாலா எனும் தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது நண்பருடன் சாப்பிட சென்றுள்ளார்.

தனியார் உணவகத்தில் ஆசை ஆசையாய் ஆனியன் ஊத்தப்ப தோசை கொண்டு வர ஆர்டர் கொடுத்துள்ளார்.

சுட சுட ஆனியன் ஊத்தப்ப தோசையை சப்ளையர் பரிமாறி விட்டுச் செல்ல, ஆசை ஆசையாய் வாங்கிய, ஆனியன் தோசையை வாடிக்கையாளர் பிட்டு சாப்பிட்ட போது எதிர்பாராத விதமாக ஆனியன் ஊத்தப்பத்தில் இரும்புத்துண்டு கம்பி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இரும்புக் கம்பியை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்,உணவக மேலாளரை அழைத்து புகார் தெரிவித்துவிட்டு, வாடிக்கையாளர் அதிகம் வந்து சாப்பிடும் உணவகத்தில் கவனக் குறைவாகவும், அஜாக்கிரதை யாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களிலும் இரும்பு கம்பியுடன் உள்ள ஊத்தப்ப தோசையை பகிர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

 வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த இரும்பு கம்பி துண்டு உள்ள ஆனியன் தோசை குறித்த காட்சிகள் தற்பொழுது உணவகத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments

Thank you for your comments