Breaking News

வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம்-ஜமாபந்தி ... ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம்-ஜமாபந்தி இன்று (16.05.2023) நடத்தப்பட்டது.


இதில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினார்.  

குறிப்பாக ஊராட்சியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா 20 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை கிராம கணக்கில் மாற்றம் செய்து பதிவேற்றாமல் உள்ளது.  

இதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை கேட்டும்,  ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரியும், விவசாயிகள் நலன் காக்கும் வகையில் பவர் டில்லர்,  உணவு தானியக் கிடங்கு, மண்பரிசோதனை நிலையம், இளைஞர்களுக்கு  வேளாண் இயந்திர பயிற்சி அளிக்க வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வாலாஜாபாத் வட்டாட்சியரிடம் வழங்கினார்.

No comments

Thank you for your comments