வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று (16.05.2023) காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இம் மனுக்கள்மீது உடனடியாக தீர்வு காணும்மாறு உத்தரவிட்டார்.
இன்று முதல் நாள் திருப்புட்குழி உள்வட்டம் தாமல் பகுதி எண் 1, தாமல் பகுதி எண் 2, தாமல் பகுதி எண் 3, திருப்புட்குழி, சிறுணைப்பெருகல், முட்டவாக்கம், தைப்பாக்கம், மேல்பங்காரம், செம்பரம்பாக்கம், சித்தேரி மேடு, துலக்கந்தண்டலம், ஆரியப்பெரும்பாக்கம், உழக்கோல் பட்டு, வதியூர், கூரம் பகுதி எண்-1, கூரம் பகுதி எண்-2, கிளார் கிராமத்தை சார்ந்த பொதுமக்களிடம் 171 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் சிறுணைப்பெருகல் கிராமத்தை சார்ந்த ஆறுமுக நாயக்கர் என்பவர் மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட அவரது நிலத்திற்கு பட்டாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், வட்டாட்சியர் திரு. புவனேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments