நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டடப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியினை இன்று (11.05.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட உப்பேரிகுளம், பல்லவன் நகர், மகாலிங்கம் நகர், விஷ்ணு நகர், திருவீதிபள்ளம் போன்ற பகுதிகளில் தலா ரூ.25 இலட்சம் மதிப்பில் 5 இடங்களில் ரூ. 1,25,00,000/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்தி ஐந்து இலட்சம் மட்டும்) நிதியுதவியில் கட்டப்பட்டு வரும் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டடங்கள் கட்டும் பணி மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டப்பட்டு வரும் பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இவ் ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித்ஜெயின், இ.ஆ.ப., துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பிரியாராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர்.திரு.க.கண்ணன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments