வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1,30,400/- (ரூபாய் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்து நானூறு மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (29.05.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.68,400/- மதிப்பிலான 10 மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம், ரெஹோபோத் மற்றும் பத்மா சுப்ரமணியம் என்ற இரு மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.50,000/- மதிப்புள்ள மனவளர்ச்சி குன்றிய சிறார்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்கான 2 AVAZ சாதனத்தையும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், 2 பயனாளிகளுக்கு ரூ. 12,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரமும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித்ஜெயின், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ரா.சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments