கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி காசோலை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையிக்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையிக்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 3 நபர்களின் குடும்பங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 இலட்சத்திற்கான காசோலைகளை இன்று (16.05.2023) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 10 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தில் உள்ள குளக்கரையில் வசித்து வந்த இந்து இருளர் இனத்தைச் சார்ந்த திரு.சின்னத்தம்பி (34) த/பெ செல்வம், திருமதி வசந்தா (50) க/பெ. ராஜா மற்றும் பெருங்கரணை கிராமத்தைச் சார்ந்த திரு.மாரியப்பன், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டமம், பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வசித்து வந்த இந்து இருளர் இனத்தைச் சார்ந்த திரு.வள்ளியப்பன் (65) மற்றும் திருமதி.சந்திரா (55) ஆகிய 5 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்துள்ளனர். இதில் திரு.வள்ளியப்பன் (65) மற்றும் திருமதி.சந்திரா (55) ஆகியோர் வந்தவாசி பகுதியை சார்ந்தவர்கள் ஆவர். எனவே, இவர்களது குடும்பத்தினருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நிதியுதவி வழங்கப்படும்.
இச்செய்தியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிந்தவுடன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களின் நலன் குறித்து அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் அவர்களிடம் விசாரித்தார். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 3 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சத்திற்கான காசோலைகளும், சிகிச்சை பெற்று வரும் 10 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளும் வழங்கப்படுகிறது.
இக்குற்றத்திற்காக 4 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 வெள்ளை நிற பிளாஸ்டிக்கேனில் 135 லிட்டர் (ஒரு கேனில் மட்டும் 30 லிட்டர்) சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பாபு, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.அபிலாஷா கௌவுர், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.அறிவுடைநம்பி, செங்கல்பட்டு நகராட்சி மன்றத் தலைவர் திருமதி.தேன்மொழி நரேந்திரன், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ராஜஸ்ரீ, சித்தாமூர் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.ஏழுமலை, உள்ளாட்சி மன்றத் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments