Breaking News

இன்றைய (03-05-2023) ராசி பலன்கள்

 


பஞ்சாங்கம் 

சோபகிருது வருடம் சித்திரை 20, புதன்கிழமை, மே 03, 2023 

நாள் - சம நோக்கு நாள்

பிறை - வளர்பிறை

விரதம்   :  பிரதோஷம்

திதி : 11:49 PM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

நட்சத்திரம் : அஸ்தம் 08:56 PM வரை பிறகு சித்திரை

யோகம் : ஹர்ஷணம் 11:27 AM வரை, அதன் பின் வஜ்ரம்

கரணம் : கௌலவம் 11:38 AM வரை பிறகு சைதுளை 11:50 PM வரை பிறகு கரசை.


சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 5:55 AM

சூரியஸ்தமம் - 6:24 PM

சந்திரௌதயம் - May 03 4:31 PM

சந்திராஸ்தமனம் - May 04 4:41 AM


அசுபமான காலம்

இராகு - 12:10 PM – 1:44 PM

எமகண்டம் - 7:29 AM – 9:03 AM

குளிகை - 10:36 AM – 12:10 PM

துரமுஹுர்த்தம் - 11:45 AM – 12:35 PM

தியாஜ்யம் - 05:09 AM – 06:48 AM

வாரசூலை : சூலம் - வடக்கு,  பரிகாரம் - பால்


சுபமான காலம்

அபிஜித் காலம் - Nil

அமிர்த காலம் - 02:37 PM – 04:18 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:19 AM – 05:07 AM


சூர்யா ராசி   :  சூரியன் மேஷம் ராசியில்

சந்திர ராசி :  கன்னி (முழு தினம்)


இன்றைய ராசி பலன்கள்  :

மேஷம்    :    நிர்வாக திறமைகள் வெளிப்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். எதையும் மற்றவர்களை விட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். எதிர்பாராத வழியில் தனவரவுகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

பரணி : சிறப்பான நாள்.

கிருத்திகை : வரவுகள் ஏற்படும்.


ரிஷபம்  :   குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நேர்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும். 


மிதுனம்  :  தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும். 

திருவாதிரை : அனுபவம் உண்டாகும். 

புனர்பூசம் : மதிப்பு கிடைக்கும். 


கடகம்  :  மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் பராமரிப்பது நிமிர்த்தமான செலவுகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சிறு தூர பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

பூசம் : முன்னேற்றமான நாள்.

ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.


சிம்மம்  :   ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். தேவைக்கு ஏற்ப தனவரவுகள்  கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உழைப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பயணங்கள் சாதகமாகும்.

பூரம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.


கன்னி  :  திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிலும் தற்பெருமையின்றி செயல்படவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அஸ்தம் : செலவுகளை தவிர்க்கவும்.

சித்திரை : மாற்றம் உண்டாகும்.


துலாம்  :  அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மாணவர்களுக்கு கற்றலில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : இழுபறிகள் மறையும்.

சுவாதி : செல்வாக்கு மேம்படும். 

விசாகம் : விழிப்புணர்வு வேண்டும். 


விருச்சிகம்  :  வியாபார பணிகளில் திறமைகள் வெளிப்படும். உடன்பிறப்புகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் நீங்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : திறமைகள் வெளிப்படும். 

அனுஷம் : அனுகூலமான நாள்.

கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.


தனுசு  :  சுபகாரியம் நிமிர்த்தமான எண்ணங்கள் ஈடேறும். பொருளாதார மேன்மையால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். குடும்ப பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். உறுதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும். 

பூராடம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.  


மகரம்  :  மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சமூக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் மூலம் மேன்மை ஏற்படும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும். 

திருவோணம் : புரிதல் அதிகரிக்கும்.

அவிட்டம் : சாதகமான நாள்.


கும்பம்  :  உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். கால்நடை பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும். 

சதயம் : நிதானம் வேண்டும்.

பூரட்டாதி : நெருக்கடியான நாள்.



மீனம்  :   புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இலக்கினை நோக்கிய முயற்சிகள் அதிகரிக்கும். பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.

உத்திரட்டாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.

ரேவதி : புரிதல் மேம்படும்.

No comments

Thank you for your comments