Breaking News

ஸ்ரீ சைதன்யா பள்ளி INTSO ஒலிம்பியாட் தேர்வில் சாதனை

பூந்தமல்லி :

நாடு முழுவதும் உள்ள 3 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக நடத்தப்படும் INTSO ஒலிம்பியாட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இத்தேர்வில் 150 மடிக்கணினிகள், 750 டேப்கள் மற்றும் தங்கப்பதக்கங்கள் பரிசுகளாக அறிவிக்கப்பட்டன. இதில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் 96 மாணவர்கள் (64%) மடிக்கணினிகளையும், 472 மாணவர்கள் (63%) டேப்களையும் மற்றும் 58% மாணவர்கள் முதல் 5 இடங்களையும், 61% மாணவர்கள் பதக்கங்களையும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். 



இந்தியா முழுவதிலும் வேறு எந்த பள்ளியும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்தவில்லை. ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி இத்தேர்வில் தொடர்ந்து முதல் இடம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று ஸ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குநர் திருமதி. சீமா அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி. எஸ். இராவ் இப்பெரும் சாதனையைச் செய்த மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் இவ்வெற்றிக்கு பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டினார்.

இத்தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 9 மாணவர்கள் மடிக்கணினிகளையும் 33 மாணவர்கள் டேப்களையும் பரிசாக வென்றனர். இவர்களைத் தவிர 199 மாணவர்கள் முதல் 5 இடங்களையும் 3778 மாணவர்கள் பதக்கங்களையும் வென்றுள்ளனர். தமிழ்நாடு DGM திரு. J. ஹரிபாபு அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறிய பள்ளியின் இயக்குநர் திருமதி. சீமா,   இந்த வெற்றிக்கு காரணம் ஸ்ரீ சைதன்யா பள்ளியின் கற்பித்தல் முறைகள், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த பாடத்திட்டங்கள் மற்றும் பல்துறை சார்ந்த கற்பித்தல் நிலைகள் (C-IPL, MPL, ICON, C-Batch, S-Batch, Medicon and Techno) INTSO ஒலிம்பியாட் தேர்வில் பள்ளியின் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் 700க்கும் மேற்ப்பட்ட கிளைகள் கொண்ட இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 96 மடிகணினி, 472 டேப், முதல் 5 இடங்களையும் 61% மாணவ மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments