போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் போட்டி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, உலக சமாதானம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் போட்டி, வள்ளல் பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கர் 195 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது.
Mini Marathon :பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள், சமூக ஊடகத்தில் பரிமாற வேண்டியவை, சொல்ல கூடாத விஷயங்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஆகியவை குறித்தும், உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, போர் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறித்தும் மற்றும் போதை பழக்கத்தால் அடிமையாகும் மாணவர்கள் மட்டும் இன்றி அவர்களது குடும்பமும் எவ்வாறு நிலை குலைந்து போகிறது என்பதை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் நடைபெற்ற போட்டியினை ஓய்வுபெற்ற நீதியரசர் திரு,பொன்.கலையரசன் தலைமையில் இயங்கும் வள்ளல் பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை அறங்காவலர்கள் திரு.எல்.அருள், திரு.எம்.ராஜேந்திரன் மற்றும் பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் திரு பி.பழனிசாமி ஆகிய மூவரும் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இப்போட்டிக்கு 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியை, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ,பொதுமக்கள், மாணவ ,மாணவிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் மிகுந்த ஆதரவுடன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அன்னை அஞ்சுகத்தில் துவங்கி காஞ்சிபுரம்பேருந்து நிலையம், மூங்கில்மண்டபம் வழியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நிறைவடைந்தது.


No comments
Thank you for your comments