Breaking News

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 295 மனுக்கள் வரப்பெற்றன... மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கல்

சேலம் :

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா  தலைமையில் நடைபெற்றது.




சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா அவர்கள் தலைமையில்  இன்று (10.04.2023) நடைபெற்றது.


ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 295 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 16 மனுக்கள் வரப்பெற்றன. 

முன்னதாக, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா அவர்கள் வழங்கினார்கள்.


இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர்,  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில்,  மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


செய்தி வெளியீடு: செய்தி - மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாவட்டம்.

 


No comments

Thank you for your comments