Breaking News

கீழ்க்கதிர்ப்பூரில் உலக பூமி தின விழா

காஞ்சிபுரம், ஏப்.23 :

காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் உலக பூமி தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய மருத்துவக் கழகம் பெண் மருத்துவர்கள் பிரிவின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் ரத்தசோகை கண்டறியும் மருத்துவ முகாம் ஆகியன சனிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூர் கிராமத்தில் இந்திய மருத்துவச் சங்கத்தின் பெண் மருத்துவர்கள் பிரிவும், பசுமை இந்தியா அறக்கட்டளையும் இணைந்து உலக பூமி தின விழாவை கொண்டாடினார்கள்.இதனையொட்டி அக்கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் ரத்தசோகை கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றன.முகாமிக்கு இந்திய மருத்துவச் சங்க காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.

கிளையின் இணைச் செயலாளர் வி.முத்துக்குமரன்,பெண் மருத்துவப் பிரிவின் தலைவர் எம்.நிஷாப்பிரியா,மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிளையின் மாநில துணைத் தலைவர் பி.டி.சரவணன் இந்திய மருத்துவச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

விழாவில் பசுமை இந்தியா அறக்கட்டளையின் நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.ஊராட்சி மன்ற தலைவர் கே.திலகவதி குமரேசன் முகாமிற்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் எம்.சஞ்சீவி நன்றி கூறினார்.

முகாமில் 47 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் 9 பேருக்கு ரத்தசோகை இருப்பது தெரிய வந்தது.இவர்களுக்கு ரத்தசோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும்,மருந்துகளும் வழங்கப்பட்டன.


No comments

Thank you for your comments