காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
காஞ்சிபுரம் :
சித்திரை மாத அமாவாசை தினத்தையொட்டி காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும்,108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்கப்பெருமாள் கோயில்.
சித்திரை மாத அமாவாசை தினத்தையொட்டி மூலவர் யோகநரசிம்மருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் அழகிய சிங்கப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் அலங்கார மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவினையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

No comments
Thank you for your comments