பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வாழ்வில் ஒளியேற்றி வைத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வாழ்வில் ஒளியேற்றி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்ததோடு அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மனவளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச்சிதைவு பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கான பராமரிப்பு உதவித்தொகை, சுயவேலைவாய்ப்பு (வங்கிக்கடன்), மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை, அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கரநாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் மற்றும் பிரெய்லி கைகடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம், முடநீக்குசாதளம் (காலிபர்), ஊன்றுகோல், கை, கால்பாதிக்கப்பட்டவருக்கான திருமண உதவித்தொகை, பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, செவித்திறன் குறைவுடையோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கை, கால் பாதிக்கப்பட்டவர், காது கேளாத பேச்சு குறைபாடுள்ள நபர், பார்வையற்றவர். ஆகிய மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் பட்டதாரி இல்லாத மாற்றுத் திறனாளிக்கு ரூ.25,000/- மற்றும் பட்டதாரி மாற்றுத்திறனாளிக்கு ரூ. 50,000/- மற்றும் வழங்கபடுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2022-ஆம் ஆண்டு முதல் 27.01.2023 ஆம் ஆண்டு வரை 04 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 190 பயனாளிகளுக்கு ரூ.6,75,0000 மதிப்பிலான தையல் இயந்திரமும், 3881 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 330 பயனாளிகளுக்கு ரூ.9,65,000 மதிப்பிலான செவித்திறன் கருவியும், 165 பயனாளிகளுக்கு ரூ.2092500 மதிப்பிலான திறன்பேசியும், 14 பயனாளிகளுக்கு ரூ.2,46,200 மதிப்பிலான மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நாற்காலியும், 117 பயனாளிகளுக்கு ரூ.91,560 மதிப்பிலான தாங்கிகளும், 160 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும், ரூ.61,400 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது என மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காது கேளாதோருக்கு மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி வழங்கும் திட்டத்தில் பயனடைந்த காஞ்சிபுரம் வட்டாரத்தை சார்ந்த பயனாளி ஜெயஸ்ரீ. வயது (19)
என் பெயர். ஜெயஸ்ரீ. நான் ஒரு பார்வைற்ற மாற்றுத்திறனாளி. நான் வந்தவாசியில் உள்ள அகிலாண்டேஸ்வரி கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறேன். என் தந்தை ஓர் கூலித்தொழிலாளி எனக்கு செல்போன் வாங்கித்தர இயலவில்லை. தமிழக அரசின் உதவியால் எனக்கு செல்போன் (திறன்பேசி) கிடைத்தது. என் படிப்பிற்கு உறுதுணையாக இருந்தது. எனது இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் எனது நன்றியினை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு:
திரு.க.இராமச்சந்திர பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments