Breaking News

வாட்ஸ்அப் வைரல் - காட்பாடி அருகே கொக்கி போட்டு கரண்ட் எடுத்து சிறு பாலம் போடும் பணி... திமுக ஒன்றிய பெருங்குழு தலைவர் அராஜகம்....

வேலூர் மாவட்டம்  காட்பாடி அருகே கொக்கி போட்டு கரண்ட் எடுத்து சிறு பாலம் போடும் பணி திமுக ஒன்றிய பெருங்குழு தலைவர் அராஜகம்....

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பேடு ஏரிக்கரை அருகே சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது இதற்கான ஒப்பந்தத்தை திமுக காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது 

இதனை அடுத்து எந்த பணியாக இருந்தாலும் ஒப்பந்தகாரர்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தங்களது ஆட்சி நடைபெறுகிறது என்ற ஆணவப் போக்கில் அங்குள்ள மின்சார கம்பியில் இருந்து கொக்கி போட்டு கரண்ட் எடுத்து திருடி இவர் சிறு பாலம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த அராஜக போக்கினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனடியாக தலையிட்டு எச்சரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுபோன்று திமுகவினர் அராஜகம் செய்வதால் திமுக அரசுக்குதான் அவப்பெயர்...  திமுகவினர் என்றால் அராஜகம் என்ற பெயர் மெல்ல மறைய தொடங்குகியது... இந்நிலையில், இதுபோன்று சிலர் செய்யும் அராஜகம் மேலும் மறையும் அவப்பெயர் தலைதூக்க ஆரம்பிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் என்ற  பேச்சு எழுகிறது... 

இதுபோன்ற நடவடிக்கை  நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை...   காட்பாடியில் திமு கழத்தின்  மூத்தவரும் அமைச்சருமான துரைமுருகன் இருக்கும் பகுதியில் இதுபோன்ற அராஜகம் செயல் அனைவரையும் ஆழ்ந்த சிந்தனையில் தள்ளுகிறது... அமைச்சர் துரைமுருகன் அறிந்தும் அறியாமல் உள்ளாரா.... என்ற கேள்வியும் எழுகிறது..

திமுக தலைவரும் முதலமைச்சம் மு.க.ஸ்டாலின் இதுபோன்றோர்களுக்கு கடிவாளம் இடவேண்டும் என்ற கோரிக்கை வலுக்கின்றன... 

இதுபோன்ற ஒப்பந்ததாரர்கள் உரிமம் ரத்து செய்யவேண்டும் என்று பொதுமக்கள்  மத்தியில் கருத்து வலுக்கின்றன...






No comments

Thank you for your comments