Breaking News

இன்றைய (24-04-2023) ராசி பலன்கள் - முக்கிய தகவல்கள்

 

ஏப்ரல் 24, 2023,  சித்திரை 11 - திங்கட்கிழமை 

சூரியோதயம்  :   05:47:12

சூரியாஸ்தமனம்  :   18:51:54

திதி : காலை 10.11 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

நட்சத்திரம் : அதிகாலை 01.57 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்.

அமிர்தாதி யோகம் : அதிகாலை 01.57 வரை அமிர்தயோகம் பின்பு காலை 06.00 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம்  :  விசாகம்   

விரதாதி விசேஷங்கள் :   சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

  • மருத்துவ சிகிக்சை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
  • பற்களை சீர் செய்வதற்கு உகந்த நாள்.
  • மல்யுத்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.
  • சிற்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

பண்டிகை  : 

  • திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் ரத உற்சவம்.
  • மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் பூத அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
  •  ஆறுமுக மங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர் உற்சவம் ஆரம்பம்.
  •  ஸ்ரீகௌமாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு.

வழிபாடு :   அன்னபூரணியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசி பலன்கள்  :

மேஷம்  : இழுபறியான தனவரவுகள் சிலருக்கு கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.

பரணி : அனுகூலமான நாள்.

கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.


ரிஷபம்  :  விலை உயர்ந்த ஆபரணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய நபர்களின் சேர்க்கை உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : முடிவு கிடைக்கும்.

ரோகிணி : பிரச்சனைகள் குறையும். 

மிருகசீரிஷம் : ஆர்வமின்மை விலகும். 


மிதுனம்  :   குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். செய்கின்ற செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும். 

திருவாதிரை : தாமதம் உண்டாகும்.

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


கடகம்  :   தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு  

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

பூசம் : பதற்றமின்றி செயல்படவும். 

ஆயில்யம் : புதுமையான நாள்.


சிம்மம் :  சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மற்றவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் தொழில் வளர்ச்சிக்கான எண்ணங்கள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மகம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.


கன்னி  :  உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மறைமுகமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நீர்நிலை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவு உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : ஆதாயம் உண்டாகும். 

அஸ்தம் : மதிப்பு அதிகரிக்கும். 

சித்திரை : அனுசரித்து செல்லவும்.


துலாம்  :  கூட்டு வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முயற்சிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : நிதானம் வேண்டும்.

சுவாதி : ஒற்றுமை மேம்படும். 

விசாகம் : நட்பு விரிவடையும்.


விருச்சிகம்  :   எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் நேரிடலாம். புதிய முயற்சிகளை குறைத்து கொள்வது நல்லது. வழக்கு சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

விசாகம் : காலதாமதம் ஏற்படும்.

அனுஷம் : முயற்சிகளை தவிர்க்கவும்.

கேட்டை : சிந்தித்து செயல்படவும்.


தனுசு  :   புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த காலதாமதம் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஈடுபாடு உண்டாகும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : எண்ணங்கள் கைகூடும்.

பூராடம் : தெளிவு பிறக்கும்.

உத்திராடம் : ஆதாயகரமான நாள்.


மகரம்  :  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.  மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டை மாற்றி அமைப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


கும்பம்  :  வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். சில பணிகளை செய்யும் பொழுது நிதானம் வேண்டும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : மந்தத்தன்மை குறையும்.  

சதயம் : இன்னல்கள் நீங்கும். 

பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.


மீனம்  :  குடும்ப உறுப்பினர்களுக்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை தெரிவிக்கவும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

பூரட்டாதி : சிந்தனைகள் பிறக்கும்.

உத்திரட்டாதி : விமர்சனங்கள் குறையும். 

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

No comments

Thank you for your comments