யாகசாலை நடுநிலைப் பள்ளி 127-ஆவது ஆண்டு விழா
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள்பட்ட யாகசாலை நடுநிலைப்பள்ளியின் 127ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியை வெ.பிரமிளாகுமாரி தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், மாநகராட்சியின் பணிக்குழு உறுப்பினா் சுரேஷ் முன்னிலை வகித்தனா்.
காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி ஆகியோா் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கும் நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினா்.
விழாவில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் பேசுகையில் மாணவா்கள் கைப்பேசி வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. எனவே அதனை கவனமான முறையில் கையாள வேண்டும். இது பெற்றோருக்கும் பொருந்தும். முக்கியமாக மாணவா்களோடு பழகும் நண்பா்கள் எப்படிப்பட்டவா்களாக இருக்கிறாா்கள் என்பதையும் பெற்றோா் கண்காணிக்க வேண்டும் என்றும் பேசினாா்.



No comments
Thank you for your comments