Breaking News

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி

 காஞ்சிபுரம் 17-வது வட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி கழக கொடி ஏற்றி அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  


காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளர் சுந்தர் மாவட்ட துணைச் செயலாளர் கா. செல்வம் கழக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோரின் உத்தரவின் பேரில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி  பல்வேறு நலத்திட்ட உதவிகள் அன்னதானங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அந்த வகையில் 17 வது வட்டத்தில் சார்பில் காமராஜ் சாலையில் வட்ட பிரதிநிதி வழக்கறிஞர் துரைமுருகன் ஏற்பாட்டின் படி கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது 

இதனைத் தொடர்ந்து வணிகர் வீதியில் வட்ட பொறுப்பாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டின் படி அறுசுவை உணவு வழங்கப்பட்டது 


இதில் மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி அவை தலைவர் செங்குட்டுவன் கழகத் துணைச் செயலாளர் முத்துச்செல்வன் பொருளாளர் சுப்பராயன்.எல்லப்பன். பகுதி கழக செயலாளர் திலகர்‌ சந்துரு. தசரதன். வெங்கடேசன். குமரேசன். செந்தில். குடியரசு. உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments