Breaking News

உலக வன நாள் நிகழ்ச்சி... மரக்கன்றுகளை நட்டு வனப்பாதுகாப்பு சம்பந்தமான உறுதி மொழி ஏற்பு

உலக வன தினத்தை முன்னிட்டு இன்று(21.03.2023) காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முசரவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறையின் சார்பில் மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் P.பகலவன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வனப்பாதுகாப்பு சம்பந்தமான உறுதி மொழி ஏற்றனர். 




மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு காடுகளினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.



No comments

Thank you for your comments