Breaking News

காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் சொத்துக்களை மீட்க நடவடிக்கை

காஞ்சிபுரம், மார்ச் 23:

காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக முஸ்லிம் ராஷ்டிரிய அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் பாத்திமா அலி வியாழக்கிழமை தெரிவித்தார்.



காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்துக்களில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அரசு மருத்துவமனையில் சந்தித்து முஸ்லிம் ராஷ்டிரிய அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் பாத்திமா அலி ஆறுதல் கூறினார்.

மத்திய அரசு சார்பில் உயிரிழந்தோருக்கு ரூ.2லட்சமும்,காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டிருப்பதையும் அவர்களிடம் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது..

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உதாசின் பாவாஜி மடம் உள்ளது.இம்மடமானது சுமார் 700 ஆண்டுகள் பழமையான மடமாகும்.தற்போது இம்மடத்தின் மடாதிபதியாக கர்ஷினி அனுபவானந்த் சுவாமிஜி பொறுப்பு வகித்து வருகிறார். இவரைச் சந்தித்து ஆசி பெற்றோம்.இம்மடத்தின் சொத்துக்கள் ஏராளமானவை பலரும் ஆக்கிரமித்திருப்பதாக தெரிவித்தார்.

அவற்றை மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது உயிருக்கும்,உடமைக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வலியுறுத்துவோம் என்றும் பாத்திமா அலி தெரிவித்தார்.பேட்டியின் போது மிஷன் மோடி 2024 அமைப்பின் தமிழகத் தலைவர் டி.வி.தசரதனும் உடன் இருந்தார்.

 

No comments

Thank you for your comments