ஆவடியில் வட்டாட்சியர் , சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை
ஆவடி :
ஆவடியில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 15.03.2023 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஆவடி மற்றும் பூந்தமல்லியிலும் அதிரடி வேட்டையில் இறங்கினர்.
ஆவடியில் மட்டும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 2,6802 ரூபாய் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினை தெரிவித்தனர்
மேலும் சில கோப்புகளை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர் இதேபோல் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிக அளவு புரோக்கர்கள் உலா வருவதாகவும் இலவசமாக வழங்க வேண்டிய பட்டாக்களுக்கு 20 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை புரோக்கர்கள் மூலம் விலை பேசப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வந்த தகவல் அடிப்படையில் இங்கு ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்தனர். இங்கிருந்து சில கோப்புகளையும் எடுத்துச்செல்லதாகவும் தெரிவித்தனர்
இதே போல் ஆவடி மாநகராட்சியில் பல கோப்புகள் தேங்கி இருப்பதாகவும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் விஜிலன்ஸ் அதிக இடம் தெரிவித்தனர்

No comments
Thank you for your comments