மூலவர் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்
108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் கோவிலில் யுகாதி வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை விஸ்வரூப தரிசனமும் மூலவர் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது.
பிறகு அழகிய ஸ்ரீ சிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூமா தேவியருடன் முத்து வெங்கடாத்திரி கொண்டை திவ்ய அலங்காரத்தில் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.


No comments
Thank you for your comments