Breaking News

நகர்புற நலவாழ்வு மையத்தில் (UHWC) பல்வேறு வேலை வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நகர்புற நலவாழ்வு மையத்திற்கு 15 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அறிவித்துள்ளார். 



காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நகர்புற நலவாழ்வு மையத்திற்கு (UHWC) மருத்துவ அலுவலர் (Medical Officer)-5, பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW (HI Gr-II))-5, மற்றும் ஆதரவு ஊழியர் (Support Staff/Hospital Worker)-5 ஆகிய 15 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு (Notification) மற்றும் இபபணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது நிர்வாக செயலாளர், மாவட்ட நலச்சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 25.02.2023 அன்று மாலை 05.45 மணிக்குள்,  நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

Click here 👉: காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நகர்புற நலவாழ்வு மையத்தில்  (UHWC)   வேலை வாய்ப்பு

No comments

Thank you for your comments