சீரங்குப்பம் கிராமத்தில் புதிய கல்லூரி கட்டிடம் அமைக்க சார் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சீரங்குப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் கிராமத்தில் புதிதாக அமைய உள்ள கல்லூரி கட்டிட கட்டுவதற்கு கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பொதுமக்கள் புதிதாக வரவுள்ள கல்லூரி கட்டிடம் அமைக்க வேண்டும் என கோரி விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் கிராமப்புற மாணவர்களின், கல்வி மேம்படுவதற்காக கட்டப்படும், புதிய கல்லூரிக்கு கிராம மக்கள் முழு ஆதரவு தருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்திற்கு எந்த வித நலத்திட்ட உதவிகளையும் செய்யவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments