மத்திய அரசை கண்டித்து எஸ்பிஐ வங்கி முன்பு காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து எஸ்பிஐ வங்கி முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், முதலீட்டார்களை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ கிளைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் கடலூர் ரோட்டில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி கிளை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments
Thank you for your comments