செயல் விளக்கம் மூலம் மண் புழு உரம் பற்றி விவசாயிகளுக்கு ஜோலார்பேட்டை குழு மாணவிகள் விழிப்புணர்வு
பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாணவிகள் 75 நாட்கள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் வழங்கி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் குடியான் குப்பம் கிராமத்தில் ர.காவியா என்ற மாணவி மண் புழு உரம் தயாரிப்பு மற்றும் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார்கள்.
மண் புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடக்கும் விவசாய கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை ஆகியவற்றை உட்கொண்டு எச்சங்கள் சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண் புழு உரம் என்கின்றோம்.
இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய இருக்கிறது என மாணவிகள் விவசாயிகளுக்கு கூறினார்.
மண் புழு உரம் தயாரிப்பு, நன்மைகள், மண் புழு உரம் இடும் அளவு ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார்கள்.
இராசயன உரம் பயன்படுத்தாமல் இயற்கை வழியில் உரம் தயாரித்து நிலத்துக்கு அளிக்க வேண்டும் என கூறினர். இதனை சரியான முறையில் செயல்முறைப்படுத்தினால் விவசாய மக்களுக்கு இது மாபெரும் உறுதுணையாக நின்று இந்த பாதுகாக்கும் முறை இருக்கும் என மாணவிகள் தெரிவித்தனர்.
இந்த செயல்முறை விளக்கத்திற்கு ஆசிரியர் வெண்ணிலா மேரி மற்றும் சு.வைத்தீஸ்வரி உதவி பேராசிரியர் வேளாண் விரிவாக்கத்துறை, ராஜலட்சுமி , உதவி பேராசிரியர் தாவர வளர்ப்பு மற்றும் மரபியல் துறை. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்
இதில் பங்கேற்ற குழு மாணவிகள் அ.ர.கார்த்திகா, ப. கார்த்திகா, ர.காவியா, ர.காவியா, சு.கீர்த்தனா, ம.லலிதா, கே.லக்ஷ்மி தீபிகா, அ.லயீக்கா ஃபர்ஹீன், சா.மணிஷா, சே.மோனிகா.

No comments
Thank you for your comments