Breaking News

இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சிறுபாக்கம் காவல் நிலைய சரக எல்லையில்  சேலம் to விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே எதிர் எதிரே வந்த இரண்டு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் இரண்டு கார்களிலும் வந்த 7 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்று இறந்துள்ளார்.


அதில் இரண்டு சிறுவர்கள் உள்பட 6 பேர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது குறித்து தகவல் அறிந்து வந்த சிறுபாக்கம் காவல் நிலைய உதவியாளர் ஜம்புலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

No comments

Thank you for your comments