மத்திய அரசை கண்டித்து சேலம் மாநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்பாட்டம்
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கார்த்திக் தங்கபாலு கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசு அதானி குழுமத்திற்கு எல்ஐசி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பெருந்தொகையை முதலீடு செய்ய துணை போன மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு விதமான கோஷங்கள் எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியம்,தாரை ராஜ கணபதி,பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிசாமி,சரவணன்,சிரங்கன், மெடிக்கல் பிரபு, சனா வாசு, திருமுருகன், விஜய் ஆனந்த், கவுன்சிலர் கிரிஜா குமரேசன், வக்கீல் கார்த்தி, சீனிவாசன், மணிவண்ணன், வரதராஜ், சிவக்குமார், சவுக்கத் அலி, தாஜிம், மண்டல தலைவர்கள் சாந்த மூர்த்தி,நிசார்,ராமன், நாகராஜ், பெரியசாமி, மோகன், கந்தசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments