காஞ்சிபுரம் அருகே ஸ்ரீகன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கன்னியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருந்து வந்த கன்னியம்மன் கோயில் புதிதாக கோபுரங்களுடன் மகா மண்டபமும் கட்டப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நேமம் ராஜேஷ் பட்டர் தலைமையில் வியாழக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கின.லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலையில் கோ.பூஜை,சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை ஆகியன நடைபெற்று மகாபூர்ணாகுதி தீபாராதனைக்குப் பிறகு புனிதநீர்க் கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் மூலவர் மற்றும் புதிய உற்சவரான கன்னியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
இரவு உற்சவர் கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூசேரி கிராமத்தில் வீதியுலா வந்தார். கும்பாபிஷேக விழாவில் கோயில் நிர்வாகிகள் எஸ்.இளங்கோவன், என்.சேட்டு, எஸ்.அன்பழகன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments