நூற்புவேள்வியும் சர்வ சமய பிரார்த்தனை
காஞ்சிபுரம் தேரடி காதிபவனில் மகாத்மா காந்தியின் 75 வது நினைவு நாளையொட்டி நூற்புவேள்வியும் சர்வ சமய பிரார்த்தனையும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் அமைந்துள்ள காதிபவனில் அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 75 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இதில் காலை நூற்பு வேள்வியும் சர்வ சமய பிரார்த்தனையும் நடைபெற்றது.
சங்கத் தலைவர் டி. பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர் கே பாஸ்கர் வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ரமணன் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கப் பொருளாளர் எம் ஆர் ரவிக்குமார் நன்றிகளை தெரிவித்தார்
இந்த மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் காதிபவனில் பணிபுரியும் இருபால் ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments