அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்களில் மயான கொள்ளை விழா
காஞ்சிபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்களில் மயான கொள்ளை விழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பாக இருந்தது.
காஞ்சிபுரத்தில் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 140 வது ஆண்டு மயான கொள்ளை பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார் இதே போல் ஜவர்கலால் நேரு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 13ம் ஆண்டு நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் பக்தர்கள் அழகு குத்தி இழுத்து வழிபாடு செய்தனர்
இதே போல் பட்டினத்தார் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் அம்பாள் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடங்களில் அணிந்தும். அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை சமர்ப்பித்தனர்
இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் பேரருளை பெற்று சென்றனர் சாலை முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்பாளை கண்ட பக்தர்கள் காய்கறிகள் பழ வகைகள் மற்றும் தொழில் சிறக்கவும் தாங்கள் செய்யும் தொழில் சம்பந்தப்பட்ட பொருட்களை அம்பாள் மேல் வீசி தங்கள் நேர்த்தி கடனை சமர்ப்பித்தனர்.
இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
No comments
Thank you for your comments