Breaking News

விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருப்பதாவது:

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50% காலியாக இருப்பதால் தாமதமாகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர்விடும் பணி தொடங்கி உள்ளதால் விரைவில் மாதந்திர மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை அல்ல, முதல்வரின் கோட்டை. அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தாததைப் போல் மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்

No comments

Thank you for your comments