Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

ஈரோடு:

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.



ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உட்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்தியமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்., வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.


No comments

Thank you for your comments