Breaking News

Book Fair : இன்று (01-01-2023) சமூகமும், சுகாதாரமும் என்ற தலைப்பில் டாக்டர் கு.சிவராமன் கருத்துரை

 காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில்,  நடைபெறும் புத்தகத் திருவிழாவின் பத்தாம் நாளான 01-01-2023  இன்றை தினம்  உதவி இயக்குநர்/நிர்வாக இயக்குநர் காஞ்சிபுரம்/திருவள்ளுர் பட்டு கைத்தறி செல்வி.வெ.செந்தாமரை அவர்களின் கருத்துரையும்,  திரு.ரவிசுப்பிரமணியன், அவர்களின் கருத்துரையும், சமூகமும், சுகாதாரமும் என்ற தலைப்பில் டாக்டர் கு.சிவராமன் அவர்களின் அவர்களின் கருத்துரையும், பத்மஸ்ரீ கலைமாமணி. நர்த்தகி நடராஜன் அவர்களின் நடனமும் மற்றும் பள்ளி மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.


காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து, நடத்தும் முதலாவது புத்தக திருவிழா மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் கடந்த (23.12.2022) அன்று தொடங்கி வைத்தார்கள்.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

இம்மாபெரும் புத்தகத் திருவிழா 23.12.2022 முதல் 02.01.2023 வரை நடைபெறுகின்றது.  இப்புத்தக கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது இதில் தென் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்து கொள்ளும் வகையில் 125 அரங்கங்கள்  அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தகத் திருவிழாவின் பத்தாம் நாளான  01.01.2023 அன்று  காலை 10 மணி  முதல் மாலை 6 மணி வரை பள்ளி மாணவ/மாணவியர்களுக்கிடையேயான போட்டிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அங்கம்பாக்கம், பி.டி.வி.எஸ் உயர்நிலைப்பள்ளி காஞ்சிபுரம், மகரிஷி பன்னாட்டு உறைவிடப்பள்ளி சந்தவேலூர், செயின் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பெரும்புதூர், எஸ்.எஸ்கே.வி. மெட்ரிக் பள்ளி, காஞ்சிபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி களியனூர், கலாசேத்ர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அய்யப்பன்தாங்கல் மற்றும் மீனாட்சியம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர்  பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், உதவி இயக்குநர்/நிர்வாக இயக்குநர் காஞ்சிபுரம்/திருவள்ளுர் பட்டு கைத்தறி செல்வி.வெ.செந்தாமரை அவர்களின் கருத்துரையும்,  திரு.ரவிசுப்பிரமணியன், அவர்களின் கருத்துரையும், சமூகமும்,சுகாதாரமும் என்ற தலைப்பில் டாக்டர் கு.சிவராமன் அவர்களின் அவர்களின் கருத்துரையும், பத்மஸ்ரீ கலைமாமணி. நர்த்தகி நடராஜன் அவர்களின் நடனமும் நடைபெறுகிறது.

இப்புத்தகத் திருவிழாவில் தினசரி சிறப்பு விருந்தினர்களை கொண்டு பல்வேறு கருத்துரைகள் பள்ளி மாணவ/மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்கள் நடைபெறுகிறது. 

எனவே பொதுமக்கள்  மாணவ/ மாணவியர்கள் ஆர்வத்துடன் அறிவார்ந்த புத்தகங்களை படித்தும் வாங்கியும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments