Breaking News

செய்தி எதிரொலி : பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பாதுகாப்பற்ற மின் இணைப்பு மற்றும் உடைந்த சின்டெக்ஸ் டேங்க் சீரமைப்பு

 திருவள்ளூர், ஜன.1-

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் ஆண்கள் சிறுநீர் கழிப்பகத்தில் சின்டெக்ஸ் டேங்க் உடைந்து தண்ணீர் வீணாக சென்று கொண்டிருந்தது. மேலும் அருகாமையில் மின் வயர்கள் இருப்பதினால் பொதுமக்களுக்கு உயிர் பலி ஏற்படும் அபாயமும் இருப்பதாக காலச்சக்கரம் செய்தித்தாளில் 26-12-2022 அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். 

சீரமைப்பு நடவடிக்கை புகைப்படம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் சிறுநீரகம் கழிப்பதற்காக ஒரு இடம் அமைக்கப்பட்டு அதில் வாட்டர் டேங்க் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

இந்த மின்மோட்டருக்கு மின்சாரம் வழங்குவதற்காக பொதுமக்கள் கை கழுவும் இடத்திற்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு இல்லாத முறையில் இருந்ததால் தண்ணீர் மேலே சிதறி உயிர்பலி வாங்கும் அவல நிலையில் இருந்தது. 

புகார் : கை கழுவும் அருகில் மின் இணைப்பு பெட்டி 


அதுமட்டுமின்றி சிறுநீர் கழிக்கும் இடத்தில் சின்டெக்ஸ் டேங்க் உடைந்து தண்ணீர் வீணானது... மேலும் தண்ணீர் பைப்புகளும் உடைந்து பேருந்து நிலையம் முழுவதுமாக தண்ணீர் வீணாக சென்றுகொண்டிருந்தது. இதனால் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில்  தண்ணீர் தேங்கி கொசுபுழுக்கல் உற்பத்திக்கு வழிவகுத்தது. மேலும் வழிந்தோடும் தண்ணீரில் செல்ல பொதுமக்கள்  மிகவும் சிரமப்பட்டனர். 

புகார் : சின்டெக்ஸ் டேங்க் உடைந்து வீணாகும் தண்ணீர்...

இதுகுறித்து காலச்சக்கரம் நாளிதழில் “உரக்கச் சொல்லும் உங்கள் பகுதி”யில் 26-12-2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இதுகுறித்து வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த செய்தியை கண்ட மூன்று நாட்களில் நகராட்சிகளின் ஆணையர் பொன்னையா அவர்களின் உத்தரவின் பெயரில் பூந்தமல்லி நகராட்சி ஆணையர் நாராயணன் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு அதனை சரி செய்யும் பணி துவங்கி வாட்டர் டேங்க் மற்றும் மின் வயர்களையும் மாற்றி அமைத்தனர். இதனால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் காலச்சக்கரம் நாளிதழ் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றிகளை  தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களின் பணிகளை செய்யாமல் ரியல் எஸ்டேட் அதிபருடன் கைகோர்த்துக்கொண்டு  அரசு இடங்களை விற்பனை செய்து வருகிறாரா?  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... “உரக்கச் சொல்லும் உங்கள் பகுதி”யில் ஒலிக்கும் அப்பகுதி மக்களின் உரத்த குரல்... விரைவில்...



No comments

Thank you for your comments