மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை சேலத்தில் திறந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஷோரூமில் இரண்டு தளங்களில் அதிகமான இட வசதி, அதிகமான கலெக்சன்கள், அதிகமான டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன. இந்த ஷோரூமை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வணிக தலைவர் சபீர்அலி, மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், சேலம் கிளை தலைவர் ராஜசேகரன், கிளை இணைத் தலைவர் ராம்குமார் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள், கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனமானது தற்போது 10 நாடுகளில் 300 சில்லறை விற்பனை நிலையங்களையும், தமிழ்நாட்டில் கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 19 கிளைகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments
Thank you for your comments