Breaking News

செய்தித் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் நிறைவிழாவில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்தித் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் நிறைவிழாவில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில், 


அங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று புலியாட்டம்,  சமத்துவப்பாடலுக்கான கும்மி நடனம், கோமாளி ஆட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர் மேலும் பரதநாட்டியம் யோகா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

இதில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்திரையா கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கிய பாராட்டினார். 

இதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திர பிரபு. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ் பாபு அங்கம்பாக்கம் அரசு பள்ளி தலைமையாசிரியர் தணிகை அரசு அறிவியல் ஆசிரியர் சேகர் சீனிவாசன் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் திரு.பார்த்தசாரதி உள்ளிட்ட மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments