Breaking News

ஆவடியில் நகர அமைப்பு பிரிவில் அதிகாரிகள் மாற்றப்படுவார்களா?

ஆவடி :

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தற்போது உள்ள அமைச்சர் சாமு நாசர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி வந்ததை தொடர்ந்து அங்குள்ள முன்னால் அமைச்சர் மா பா பாண்டியராஜன் இந்த முறை தோல்வி அடைந்தார்.


தற்போது இதே நிலைமை தான் ஆவடி மாநகராட்சியில் உள்ள  அதிகாரிகள் ஒரு வருட ஆறு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக காலச்சக்கர நாளிதழில் செய்திகள் வெளியானது. சாலை அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் கட்டுதல், கொரோனா காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் சுகாதர பிரிவில் ஊழல்கள் பற்றியும் பொறியாளர்கள் பற்றியும் செய்திகள் வெளியிட்டிருந்தன 

இதன் எதிரொலியாக பொறியாளர் பிரிவில் ஊழலில் சம்பந்தப்பட்ட வைதியலிங்கம் பொறியாளர் மற்றும் சத்தியசீலன் ஜெயக்குமார் உதவி பொறியாளர்கள் மாற்றம் செய்தனர்.

 புதியதாக ஆறு பொறியாளர்களை ஆவடி மாநகராட்சியில் பணியில் அமர நகராட்சி இயக்குனர் பொன்னையா அவர்கள் உத்தரவின் பெயரில் மாற்றினர். இதேபோல் சுகாதாரத் துறையில் அப்துல் ஜாஃபர் செய்த ஊழல் குறித்தும் செய்தி வெளியிட்டிருந்ததை தொடர்ந்து அவரும் கடலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், தற்பொழுது  நகர அமைப்பு பிரிவில்  நகரமைப்பு அலுவலர் வேலாயுதம் மற்றும் நகர அமைப்பு ஆய்வர் நிர்மலா ஆகியோர்கள் மீது பல குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்கான புகார்களும் ஆணையருக்கு வந்ததை தொடர்ந்து, புதியதாக மேலும் ஒரு புகார் வந்துள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டி முடிக்கப்படும் நிலையில் தற்போது பல லட்சங்களை கையூட்டாக பெற்று நகர அமைப்பு அலுவலர் வேலாயுதம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் ஆணையருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் இதே போல் திருமுல்லைவாயில் பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு சீல் வைக்காமல் கையூட்டு வாங்கிக் கொண்டு அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாகவும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும் கையூட்டை பெற்றுக் கொண்டு உலா வருவதாகவும் இவர் மீது ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் மாற்றப்படுவார்களா இல்லை பணி நீக்கம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments

Thank you for your comments