Breaking News

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி..! விபத்து ஏற்படும் அபாயம்...!

வேலூர், ஜன.18-

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.  




வேலூர் மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலை பகுதிகளிலும், தெருக்களிலும், ஏராளமான கால்நடைகள் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் சுற்றி திரிந்து வருகிறது. 


வேலூர் மாநகராட்சியில் முக்கிய  போக்குவரத்து சாலையான காட்பாடி டூ பாகயம் போக்குவரத்து சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.  குறிப்பாக சாரதி மாளிகை, கிரீன் சர்க்கிள் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கின்றன. மேலும், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரும் அச்சம் கொள்கின்றனர். 

இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுகளை பிறப்பித்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டிய அலுவலர்கள் பெயரளவுக்கே பணியாற்றுகின்றனர். நடவடிக்கை என்கின்ற பெயரில் ஒருநாள் நடவடிக்கை எடுக்கின்றனர். 

அதன்பிறகு “பழைய குருடி கதவைத் திறடி” என்ற பழமொழிக்கு ஏற்ப போக்குவரத்து சாலையில் கூட்டம் கூட்டமாக மாடு திரிகிறது. வேலூர் மாநகராட்சி அலுவலர்களும் கடமைக்கு கடமையாற்றுவதால், கால்நடை உரிமையாளர்கள் சாலைகளிலேயே மாடுகளை விட்டு விடுகின்றனர். 



இந்நிலையில் இன்று, அதிக போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையான வேலூர் புதிய பேருந்து அருகில் மாடுகள் கூட்டமாக திரிந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினார்கள். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் உள்ள வாகனங்களையும் மாடுகள் சேதப்படுத்துகின்றன.  மேலும், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. 

வேலூர் மாநகராட்சியை சிறப்பாக இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சிறப்பாக பணியாற்றி வரும் மாநகராட்சி ஆணையர் இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் வேலூர் மாநகராட்சி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இனியாவது, வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவினை பின்பற்றி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா...? இல்லை செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

சாலையில் திரியும் மாடுகளை பிடிப்பதிலும் மாநகராட்சி அலுவலர்  ஒருவர் செய்யும் தில்லாலங்கடி வேலை... விரைவில் அம்பலம்...

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments

Thank you for your comments