Breaking News

பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம்

ஈரோடு :

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், பெருந்துறை சிப்காட் அலுவலக கூட்டரங்கில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க  07.01.2023 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில்,  செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் தலைமையில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிபணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

இக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்ததாவது, 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிடும் வகையில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். 

அதன்படி, (காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட) சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவப்பட்டி, எக்கட்டாம்ப £ளையம், எல்லை கிராமம், கொடுமணல், குப்பிச்சி பாளையம், முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை, புதுப்பாளையம் மற்றும் புஞ்சைப்பாலத்தொழுவு ஆகிய 10 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்டமனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றுவருகிறது. 

இதில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, தடையில்லா மும்முனை மின்சாரவசதி, மாணவ&மாணவியர்களுக்கு அரசு கலைக்கல்லூரி,  இலவசவீட்டு மனைபட்டா, தெரு விளக்கு வசதி, சாலைவசதி, நியாயவிலைக்கடை, சமுதாயக்கூடம், பொதுக்கோரிக்கைகள், மயானவசதி உள்ளிட்ட பணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தொடர்பான அறிவிப்புகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் நிதியை பெற்று வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தேவைக்கு உடனடி தீர்வு காணப்படும். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் புதியகுடிநீர் திட்டப் பணிகளும் துவங்கப்படவுள்ளது. இன்று அனைத்து துறைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் குறித்த கருத்துகளை உடனடியாக செயல்படுத்தும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்படவேண்டும். 

மேலும் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டங்கள் எவ்விததங்கு தடையுமின்றி மக்களை சென்றடையும் வகையில் அனைத்துதுறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். எனவே, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் எனதெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, ஊரகவளர்ச்சிமுகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர்  லி.மதுபாலன்  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, மாவட்டஊராட்சிஉறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை பேரூராட்சிசெயல் அலுவலர்  பார்த்திபன், ஊராட்சிமன்ற தலைவர்கள் உட்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments