Breaking News

சாலையில் இடது புறமாக செல்வது குறித்து விழிப்புணர்வு...

  • காஞ்சிபுரம் மாவட்டம் 2023 சாலை பாதுகாப்பு வாரத்தின் 6ஆம் நாள் நிகழ்ச்சியாக சாலையில் இடது புறமாக செல்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்  கா.பன்னீர்செல்வம் தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரம்!!


காஞ்சிபுரம் மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தினகரன் அவர்கள் தலைமையில் அவ்வலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்  கா.பன்னீர்செல்வம் கிழ்அம்பி, திருப்புட்குழி ஆகிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகள் ,மினி லாரி, வாடகை வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி ஒன்றாக அணிவகுப்பு செய்து வாகனங்களை இயக்கி வந்த ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து  சாலையில் இடது புறமாக செல்வது குறித்து ஓட்டுனர்களுக்கு சுமார் அரை மணி நேரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

இதில் இடது புறமாக செல்வது குறித்த நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டும், தவறான அல்லது வலதுபுறமாக வாகனங்களை இயக்கினால் சென்டர் மீடியனில் முன் வலது சக்கரம் ஏறி வாகனம் எளிதாக கவிழவும் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் ஓட்டுநர் பயிற்சி  பள்ளி, பொதுமக்கள் பாலுச்செட்டி காவல்துறையினர் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்..

மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments