காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரம், ஜன.19-
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 242 பேருக்கு பட்டங்களை பாண்டிச்சேரி மத்திய பல்கலை ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவர் பி.மருதநாயகம் வழங்கினார்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சிவக்குமார், ஆங்கிலத்துறை பேராசிரியர் விஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.விழாவில் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவர் பி.மருதநாயகம் தமிழ்,ஆங்கிலப் பாடங்களில் பயின்ற 364 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியது..
குழந்தையாக இருந்தாலும்,முதியவராக இருந்தாலும் அவரிடத்தில் உள்ள ஆற்றல்கள் அனைத்தையும்,உடல்,உள்ளம், ஆன்மா ஆகியனவற்றையும் வளர்ப்பது எதுவோ அதுவே கல்வி.கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசாத தமிழ் நூலே இல்லை எனலாம். திருப்பாவையும், திருவெம்பாவையும் வடமாநிலங்களுக்கு சென்றதோடு மட்டுமில்லாது பல நாடுகளிலும் தடம் பதித்திருக்கின்றன.பாரதியாரின் பாடல்களில் இருந்த எளிய நடையும்,புதிய பாடு பொருட்களும், இனிய சந்தமும் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்குப் புத்துயிர் அளித்தது என்று பேசினார்.
பட்டங்கள் வழங்குவதற்கு முன்பாக கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் பட்டமளிப்பு உறுதிமொழியை வாசிக்க அதை பட்டம் பெற இருந்த அனைத்து மாணவ,மாணவியர்களும் தொடர்ந்து வாசித்தனர். விழாவில் தமிழ் இளநிலையில் 130 பேர், முதுகலையில் 20 பேர், ஆங்கிலப் பாடத்தில் இளநிலையில்138 பேர், முதுகலையில் 76 பேர் உட்பட மொத்தம் 364 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
படவிளக்கம்..விழாவில் மாணவிக்கு பட்டப் படிப்பை முடித்தமைக்கான சான்றிதழை வழங்கும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவர் பி.மருதநாயகம்

No comments
Thank you for your comments