Breaking News

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

கோவை, ஜனவரி 29-

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவைபுதூர் செல்லும் வழியிலுள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், இதயங்கள் அறக்கட்டளை சார்பில், சர்க்கரை, ரத்தசோகை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன், ராசி சீட்ஸ் நிறுவன பொதுமேலாளர் பாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். 

ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான  200 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில். ஒரு மாணவருக்கு சர்க்கரை, 14 சிறுமியருக்கு ரத்தசோகை பாதிப்பும் கண்டறியப்பட்டது. 

இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன் கூறியதாவது:-

கடந்த ஐந்தாண்டுகளாக இதயங்கள் அறக்கட்டளை சார்பில் மாநிலம் முழுவதுமிருந்து, சர்க்கரை பாதிப்புக்குள்ளான ஆயிரம் மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் முழுவதும் இலவசமாக செய்து வருகிறோம். தற்போது முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன்,  வானவில் எனும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள, 35 லட்சம் ரூபாய் மதிப்பில், ரத்தம், கிட்னி, தைராய்டு' இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளும் லேப் வசதிகளுடன் கூடிய வாகனத்தை, காசி சீட்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் வழங்கியுள்ளார். 

மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் பள்ளியினர்  9042858882 எனும் மொபைல் போன் எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

Thank you for your comments