ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான, ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று (03.01.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், கிராம சபை கூட்டம், நெகிழி மேலாண்மை, திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி, தெரு விளக்குகள் பராமரிப்பு, ஊராட்சி சாலைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீர் பராமரிப்பு, மத்திய – மாநில அரசு சிறப்பு திட்டங்கள், பள்ளிகள் பராமரிப்பு, இணையதள வரிவசூல், ஜெம் போர்டல் – கணினி வாங்குதல் (Gem Portal-Computer Purchase), தெருக்களுக்கு சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களிலுள்ள சாதிய குறியீடுகள்/பின்னொட்டுகள் நீக்குதல், மின் கட்டண நிலுவை மற்றும் கூட்டு குடிநீர் கட்டண நிலுவை, வணிக வளாகங்கள், சுயநிதி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுய மதிப்பீட்டு தாள் ஆகியவை பற்றி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறப்பட்டது.
இவ் ஆய்வு கூட்டத்தில், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. மணிமாறன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments