காஞ்சிபுரத்தில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி
காஞ்சிபுரம், ஜன.22-
காஞ்சிபுரம் நாராயணகுரு மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள் மற்றும் பழமையான தபால்தலைகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது நாராயணகுரு மேல்நிலைப்பள்ளி.இப்பள்ளியில் நடைபெற்ற பழங்கால நாணயங்கள் கண்காட்சி தொடக்க விழாவிற்கு பள்ளியின் செயலாளர் சுவாமி சத்ருபானந்தா தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் கி.ரங்கராஜன் முன்னிலை வகித்தார்.இக்கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், பழமையன தபால்தலைகள், ஓலைச்சுவடிகள், பழங்காலத்தில் இருந்த பத்திரங்கள் உள்பட பலவும் இடம் பெற்றிருந்தன. முன்னதாக மூத்த வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் கண்காட்சியை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.பள்ளி மாணவ, மாணவியர் பலரும் ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments
Thank you for your comments