Breaking News

காஞ்சிபுரத்தில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கினார் ஆட்சியர்

காஞ்சிபுரம், ஜன.10-

காஞ்சிபுரத்தில் சிறந்த எழுத்தாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவருக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி செவ்வாய்க்கிழமை தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.


காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.இளங்கோவன்(38)காஞ்சிபுரத்தில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வரும் இவர் விண்ணைத் தொலைக்கும் விழுதுகள் என்ற சிறுகதை நூலை எழுதியுள்ளார். 

இதே போல காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே குப்பைய நல்லூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிபால்(66) இவர் பறையர்களின் ஆட்சியும், வீழ்ச்சியும் என்ற நூலை எழுதியுள்ளார். 

இவர்கள் இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் சிறந்த எழுத்தாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 

இவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.5.22 ஆம் தேதி சிறந்த எழுத்தாளருக்கான விருதை வழங்கியதுடன் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அழைத்து மேலும் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசை வழங்கி பாராட்டினார்.

படவிளக்கம்..சிறந்த எழுத்தாளர் விருதுக்கான ரொக்கப்பரிசை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியிடமிருந்து பெறும் சிறுகதை எழுத்தாளர் ஆர்.இளங்கவோன்

No comments

Thank you for your comments